Load Image
dinamalar telegram
Advertisement

ரியாத்தில் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் சார்பில் ரத்ததான முகாம்

ரியாத் : 92வது சவூதி அரேபியா தேசிய தினத்தை முன்னிட்டு ரியாத் மத்திய மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் - பத்தாஹ் கிளை மற்றும் கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி இணைந்து நடத்திய இரத்ததான முகாம் 16/09/2022 வெள்ளிக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பத்தாஹ்வில் நடமாடும் இரத்த வங்கி வாகனத்தில் சிறப்பாக நடைபெற்றது.

இரத்ததான முகாமிற்கான அறிவிப்பு செய்தவுடன் அயராத உழைப்பாலும் , தொடர் அழைப்பு பணியாலும் இறைவனின் கிருபையாலும் 92 வது தேசிய தினத்தை முன்னிட்டு 92 குருதிக் கொடையாளர்கள் கலந்து கொண்டு தங்களுடைய இரத்தத்தை தானமாக வழங்கினர் . மேலும் நேரமின்மை காரணமாக , இன்னும் பல சகோதரர்கள் இரத்ததானம் செய்ய முடியாமல் வருத்தத்துடன் திரும்பி சென்றனர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் பரிசு பையுடன் வழங்கப்பட்டது. முகாம் வெற்றிகரமாக நடைபெற்றதற்காக உதவிய அனைத்து சகோதரர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். இறுதியாக பத்தாஹ் கிளை தலைவர் கொடிப்பள்ளம் சாதிக் பாஷா அனைவருக்கும் நன்றியுரையாற்ற முகாம் இனிதே நிறைவடைந்தது.

- நமது செய்தியாளர் காஹிலா

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement