Load Image
dinamalar telegram
Advertisement

சகலகலாவல்லி ரமிதா வெங்கட் பரதநாட்டிய அரங்கேற்றம்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாநகரம் ஹூஸ்டன் பல்கலைக்கழகம்- பையூ அரங்கத்தில் ராதா- ஸ்தாணுநாதன் தம்பதியின் மகள் ரமிதா வெங்கட் பரதநாட்டிய அரங்கேற்றம் நடந்தேறியது. விழாவினை சிறப்பிக்க அவர்களின் குடும்பஉறுப்பினர்களும் நண்பர்களும் குழுமியிருந்தனர்.அரங்கத்தின் நுழைவாயிலில் நடராஜப்பெருமானின் ஓவியம்மிகத் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது. அரங்கேற்ற நிகழ்வுநடராஜர் பூஜையில் ஆரம்பம் ஆனது. குரு.டாக்டர்.சுனந்தாநாயர், ரமிதாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள்அனைவரும் செல்வி.ரமிதாவிற்கு ஆசிகளை வழங்கினர். நடராஜப்பெருமானின் அருளாலும், குரு.டாக்டர்.சுனந்தாநாயரின் பரிபூரண ஆசியுடனும் குருவின் கரங்களால் ரமிதா சலங்கையினைப் பெற்றுக்கொண்டார்.ரமிதாவின் பெற்றோர் அவையினரை வரவேற்று அரங்கேற்ற நிகழ்வின் தொகுப்பாளர்கள் ரகிதா ராம் மற்றும் பவானி அய்யரிடம் நிகழ்வினைஒப்படைத்தனர்.அரங்கேற்ற நிகழ்வு இனிதே நடைபெற ரமிதாகடவுளுக்கும், குருவிற்கும், இசைக் குழுவினர்களுக்கும் மற்றும்அவையினருக்கும் மலர்கள் தூவி மரியாதை செலுத்தும்விதமாக ஜோக் ராகத்தில் அமைந்த புஷ்பாஞ்சலியில் துவக்கம் செய்தார்.இரண்டாவதாக, கல்யாணி ராகத்தில் ஜதிகள் நிரம்பிஇருக்கக்கூடிய ஜதீஸ்வரத்தில் தாளத்திற்கு ஏற்றார் போல்நடனம் புரிந்து அரங்கம் அதிரச் செய்தார். அழகும் அபிநயமும்ஒன்று கூடி நாட்டியக்கலையினைத் தத்ரூபமாகவெளிப்படுத்துவது வர்ணம் பகுதியாகும். சிவபெருமானின்தோரணைகளை மிக அழகாக வர்ணத்தில் வெளிப்படுத்திஅவையினரின் கண்முன்னே கொணர்ந்தார் ரமிதா.அடுத்ததாக, நடராஜர் பெருமானின் மேல் ஆனந்தக்கூத்தாடினார் பாடல் ரிஷபப்ரியா ராகத்தில் அமைந்த்திருந்தது. செல்வி.ரமிதா, அவையினர் அனைவரின் முன்னிலையில் சிதம்பரப் பெருமானை கொணர்ந்து நெகிழச் செய்தார்.முத்துசாமி தீக்ஷிதர் இயற்றிய மீனாட்சி மேமுதம் தேஹி பாடல்பூர்விக்கல்யாணி ராகத்தில் அமைந்து இருந்தது. இந்தபாடலுக்கு, ரமிதாவின் கொள்ளுப்பாட்டி மீனாட்சி அம்மாள், மைசூர் மகாராஜாவின் முன்னிலையில் வீணை வாசித்ததாகவும், அவருக்கு ராஜா வீணையை பரிசாக அளித்த வரலாறு அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது. ஆடாது அசங்காதுவா கண்ணா பாடலுக்கு கொஞ்சும் கோகுலக்கிருஷ்ணனைகண்முன்னே கொணர்ந்தார் குட்டி ரமிதா. பதினான்கு வயதே நிரம்பிய ரமிதா, நடன நிகழ்வின் இறுதிக் கட்டமான தில்லானாபகுதியினை லால்குடி ஜி.ஜெயராமனின் பாடலுக்கு ஆடி தனது பரதநாட்டிய அரங்கேற்றத்தினை இனிதே நிறைவு செய்தார்.ஆறாம் வயதிலேயே நடனப் பயணத்தை துவக்கிய சகலகலாவல்லிரமிதா தனது ஆறாம் வயதில் குரு. டாக்டர்.சுனந்தாநாயரிடம் நடனப் பயணத்தினை துவங்கினார். பரதம்மேல் இவருக்கு உள்ள ஆர்வம் மற்றும் திறமையினால், குருவின் உந்துதலால் பற்பல நடனப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பல பெற்றுள்ளார். அவற்றுள் முக்கியமாகடெக்சஸ் ஸ்டார் கலாக்கார், ஜல்வா, சேவா, டான்சிங்ஸ்டார்ஸ், சப்தமி, மற்றும் பாரதி கலை மன்றம்குறிப்பிடத்தக்கதாகும்.மதுரை ஆர். முரளிதரன் நடத்திய சிவகாமியின்சபதம் நாட்டிய நாடகத்திலும் பங்கு பெற்றுள்ளார். நடனம் மட்டுமல்லாது, ரமிதா கர்நாடக வயலின் மற்றும் மேற்கத்தியவயலின் இரண்டும் பயின்று வருகிறார். கர்நாடகசங்கீததினையும் விட்டு வைக்கவில்லை இவர்! ஆறாம் வயதில்இருந்து ராஜ ராஜேஸ்வரி பட்டிடம் முறையாகசங்கீதம் பயின்று வருகிறார். நடனம் மற்றும் இசையில்நாட்டமுள்ள ரமிதா பள்ளியில் நடத்தும் கூடைபந்து மற்றும் கால்பந்து விளையாட்டுக் குழுவிலும் இருக்கிறார். தன்னார்வலர்கள் நடத்தும் ஏகம் மற்றும் பள்ளிகள் நடத்தும்பெண்கள் ஸ்கௌட் பிரிவிலும் பங்கு வகிக்கிறார். இத்தகுதிறமை மிகு ரமிதா வரும் ஆகஸ்டு மாதம் உயர்நிலைப்பள்ளியில் தடம் பதிக்கிறார்.குரு டாக்டர்.சுனந்தா நாயர் ஹூஸ்டன் மாநகரத்தில்தனது நடனப்பள்ளியின் மூலம் பந்தநல்லூர் பாணி நாட்டியகலையினை தனது மாணவர்களுக்கு வழங்கி வருகிறார். இவரின் வழி நடத்துதலில் மாணவர்கள் பலவிதமானநடனப்போட்டிகளிலும் தேசிய அளவிலான நடனப்போட்டிகளிலும் கலந்து கொண்டும் பரிசுகளைப்பெற்றும் நடனப்பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். தகவல்: கௌசல்யா சங்கர் நம்பி- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் உலக தமிழர் செய்திகள் :

Advertisement