Load Image
dinamalar telegram
Advertisement

சிங்கப்பூரில் நூல் வெளியீட்டு விழா

சிங்கப்பூர் கவிமாலை ஏற்பாட்டில் மூத்த கவிஞரும் கவிமாலைக் காப்பாளருமான மா.அன்பழகன் எழுதிய – “ மேகம் மேயும் வீதிகள் எனும் கவிதைத் தொகுப்பு – டூரியனுள் பலாச் சுளை எனும் கவிதைத் தொகுப்பு – “ கூவி அழைக்குது காகம் 4 ஆம் பாகம் எனும் மாணவர் கடித இலக்கியம் – “ ஐம்பதிலும் வாழ்க்கை வரும் “ எனும் தன் முனைப்புக் கட்டுரை நூல் ஆகியவைகளின் வெளியீட்டு விழா ஆகஸ்டு ஏழாம் தேதி உமறுப் புலவர் தமிழ் மொழி அரங்கில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. சிங்கப்பூர்த் தமிழ்ப் பேராசிரியர் சுப.திண்ணப்பன் – சிங்கப்பூர் அயலக முன்னாள் தூதர் கேசவபாணி – சிங்கப்பூர் இந்து அறக்கட்டளை வாரியத் துணைத் தலைவரும் கௌரவ நீதிபதியுமான இரா.தினகரன் – மேனாள் நாடாளு மன்ற உறுப்பினர் இர்ஷாத் அஹமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிராப்னெக்ஸ் சொத்து முகவர் நிறுவனத் தலைமை நிர்வாக இயக்குநர் முஹமது இஸ்மாயில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தமிழக்தைச் சேர்ந்த பழ.கருப்பையா விழாவில் பங்கேற்று “ நூல்களை ஏன் படைக்க வேண்டும் – ஏன் படிக்க வேண்டும் ? “ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

சிங்கப்பூர் ஜோஸ்கோ பயண ஏற்பாட்டுக் குழுத் தலைவர் நாகை தங்கராசு – லிஷா தலைவர் சங்கரநாதன் - அவண்டா வீ.புவனேஸ்வரன் – ஊடகவியலாளர் ஜே.கே.சரவணன் – தமிழர் பேரவையின் வெ.பாண்டியன் – தமிழ்மொழி பண்பாட்டுக் கழகத் தலைவர் மு.ஹரிகிருஷ்ணன் – தமிழாசிரியர் சங்கத் தலைவர் த.தனபால் குமார் – ஜோதி ஸ்டோர் புஷ்பக் கடை அதிபர் ராஜ்குமார் சந்திரா முதலியோர் முதற்படி பெற்றுக் கொண்டனர். அரங்கம் நிறைந்த விழாவில் கலந்து கொண்டோர் அணிவகுத்து வந்து நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.

முத்தாய்ப்பு நிகழ்வாக சிங்கப்பூரில் வாழும் – நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய இராணுவத் தளபதியும் – “ டெல்லி சலோ “ என்று முழக்கமிட்டு நேதாஜியையே கவர்ந்தவரும் கவிஞருமான 95 அகவை நிரம்பிய வை.சுதர்மன் தம்பதிகள் கௌரவிக்கப்பட்டனர். அவர்கட்குப் பொன்னாடை போர்த்தி சீர் வரிசை வழங்கி நூலாசிரியர் தம்பதிகள் ( மா.அன்பழகன் தம்பதியர் ) பலத்த கரவொலிக்கிடையே சிறப்பித்தனர். கவிமாலைக் கவிஞர் இன்பா நிகழ்வினை நெறிப்படுத்தினார். சொற்சுவையும் பொருட்சுவையும் பெற்ற தமிழ்ச் சுவைஞர்களுக்கு அறுசுவை விருந்துமளித்துச் சிறப்பிக்கப்பட்டது. முன்னதாகக் கவிஞர் மா.அன்பழகன் வரவேற்புரை ஆற்றினார்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement