Load Image
dinamalar telegram
Advertisement

சிங்கப்பூர் ஆலயத்தில் கூழ் பூஜை

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம்.. இந்த மாதத்தில் அம்பிகைக்குப் பல்வேறு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். ஆடி வெள்ளி – ஆடி செவ்வாய் எனப் பூஜைகள் களை கட்டும். ஆடி மாதத்தில் வெப்பமும் காற்றும் இணைந்திருக்கும். உடலுக்குக் குளிர்ச்சி தரும் கூழ் – வேப்பிலை – மஞ்சள் நீர் வைத்து அம்மனுக்கு வழிபாடு நடத்துவர். ஆடி மாத வழிபாடுகளில் வேப்பிலையும் மஞ்சளும் இடம் பிடித்தன. இவை பிணிகளிலிருந்தும் நோய்க் கிருமிகளிலிருந்தும் மக்களைப் பாது காப்பவை.

வரலாற்றுச் சிறப்பு மிக்க சிங்கப்பூர் தொபாயோ ஸ்ரீ வைராவி மட காளியம்மன் ஆலயத்தில் ஆகஸ்டு ஏழாம் தேதி – இவ்வாலயத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ அம்பிகைக்கு கூழ் வார்த்திடும் வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. சங்கல்பத்துடன் பூஜை தொடங்கியது. விக்னேஸ்வர பூஜை தொடர்ந்தது. அடுத்து ஸ்ரீ காளிகாம்பாவுக்கு காயத்ரி மந்த்ர ஹோமம் நடைபெற்றது. ஹோமத்தில் வைத்துப் பூஜிக்கப்பட்ட புனித கடம் ஆலயம் வலம் வரப் பெற்று கலசாபிஷேகம் நடைபெற்றது கண்கொள்ளாக் காட்சியாகும்.

பின்னர் பக்தப் பெருமக்கள் சமர்ப்பித்த கூழ் பூஜை நடைபெற்று மகா தீபாராதனை நடைபெற்ற போது பக்தப் பெருமக்களின் “ ஓம் சக்தி ....ஓம் சக்தி “ முழக்கம் மெய் சிலிர்க்க வைத்தது. சர்வ அலங்கார நாயகியாக ஸ்ரீ காளிகாம்பாள் எழுந்தருளி – மங்கல இசையும் பக்தர்களும் புடை சூழ ஆலயம் வலம் வந்து அருள்பாலித்தார். நிறைவாக பங்கேற்ற பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது. ஆலய மேலாண்மைக் குழுவினர் மிகச் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement