நாக பஞ்சமி என்பது இந்து வழிபாட்டு முறைகளில் ஒன்று. நாக தோஷம் நீங்கவும் – தங்களின் சந்ததிகளுக்கும் அந்த தோஷம் பாதிக்காமல் இருக்கவும் நாக வழிபாடு செய்யப்படுகிறது. ஆடி மாதம் வளர்பிறை சுக்ல பட்ச பஞ்சமி நாளில் இது அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நாளில் கருட பஞ்சமி விரதமும் கடைபிடிக்கப்படுகிறது.
சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணர் ஆலயத்தில் ஆகஸ்டு 2 ஆம் தேதி நாக பஞ்சமி பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு பதிணென் வகையான வாசனாதித் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் ஸ்ரீ நாக நாகேஸ்வரருக்கு நடைபெற்றது. பக்தர்கள் பங்கேற்ற மஞ்சள் குட அபிஷேகம் தொடர்ந்தது. மஹா தீபாராதனையின் போது சில மகளிர் பக்திப் பெருக்கால் நாக நடனம் புரியத் தொடங்கி விட்டனர் தலைமை அர்ச்சகர் விபூதி இட்டு சாந்தப்படுத்தி அமைதி ஏற்படுத்தினார். நாக பஞ்சமி வழிபாடு பற்றி தலைமை அர்ச்சகர் நாகராஜ சிவாச்சாரியார் விளக்கினார். நிறைவாக கலந்து கொண்ட பக்தப் பெருமக்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.
- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!