Load Image
dinamalar telegram
Advertisement

துபாயில் மரணமடைந்த காயல் இளைஞர் உடல் நல்லடக்கம்

துபாய் : துபாய் சோனாப்பூர் பகுதியில் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த ரியாஸ் என்ற இளைஞர் உடல் நலக்குறைவால் கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி மரணமடைந்தார். இது குறித்த தகவலை துபாய் போலீசார் இந்திய துணை தூதரகத்துக்கு தெரிவித்தனர். இந்திய துணை தூதரகத்தின் வழிகாட்டுதலில் முதுவை ஹிதாயத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அபூபக்கர், மாநில துணைச் செயலாளர் காயல் மக்கி ஆகியோரை தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

காயல்பட்டணம் இந்திய யூனியன் முஸ்லிம் நகர துணை தலைவர் ஏ.ஆர். தாஹா மூலம் சம்பந்தப்பட்ட குடும்பத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த குடும்பத்தினர் விருப்பத்தின் பேரில் துபாய் நகரில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி துபாய் அல் கூஸ் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நல்லடக்கத்தில் அமீரக காயல் நல மன்ற தலைவர் ஜே.எஸ்.ஏ. புஹாரி, சாகுல் ஹமீது, அசார் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement