Load Image
dinamalar telegram
Advertisement

சர்வதேச திருமதி அமீரகம் 2022 போட்டியில் மதுரை பெண் வெற்றி

பஹ்ரைன் மனாமா: கடந்த வாரம் துபாயில் நடைபெற்ற சர்வதேச திருமதி அமீரகம் 2022 போட்டியில் பஹ்ரைனில் வசிக்கும் மதுரை பெண் ஜனனி ஷங்கர் Mrs. Elegant பட்டம் வென்றார். மதுரையில் பிறந்தவரும் தனது தாய் தந்தையுடன் பஹ்ரைனில் வசித்தவரும் இந்தியன் பள்ளியின் முன்னாள் மாணவியான இவர் தற்போது முன்னணி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து கொண்டு கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் பஹ்ரைனில் வசித்து வருகிறார்.இதன் மூலம் சர்வதேச அழகி போட்டியில் பஹ்ரைனில் இருந்து வெற்றி பெற்றவர் என்ற பெருமையை பெறுகிறார். வெற்றி மேடையிலேயே தமிழகத்தில் உருவாகவிருக்கும் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றுள்ளார். முன்னதாக இவர் நடித்த குறும்படங்கள் இந்திய அளவில் பல விருதுகளை பெற்றுள்ளது.வெற்றி பெற்று திரும்பியவருக்கு விமான நிலையத்தில் பஹ்ரைனில் பல இந்திய மொழிகளில் உருவாகிக்கொண்டிருக்கும், அவர் கதாநாயகியாக நடிக்கும் 'மித்ரா' திரைப்பட குழுவினர் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 'திருமணமான பெண்களுக்கு பொது இடங்களில் தன்னம்பிக்கையை வளர்ப்பதே எனது லட்சியம்' என்று கூறினார்.- நமது செய்தியாளர் பெ. கார்த்திகேயன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement