துபாயில் அமெரிக்க தமிழ் பிரமுகருக்கு வரவேற்பு
துபாய் : துபாய் அல் கிசஸ் பகுதியில் அமெரிக்காவில் இருந்து வந்த தமிழக பிரமுகர் அபு கானுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மதுரையைச் சேர்ந்த அபு கான் அமெரிக்காவில் கணினி பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் சமூக, இலக்கிய பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். அவருக்கு துபாய் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். மேலும் மதுரை கவிஞர் இரா. இரவி எழுதிய ‘ஹைக்கூ உலா’ என்ற நூலையும் அன்பளிப்பாக வழங்கி கௌரவித்தார்.
அப்போது பேசிய தொழில் அதிபர் இளையான்குடி அபுதாஹிர் மதுரையைச் சேர்ந்த அபுகான் அமெரிக்காவில் தமிழ் சமுதாயத்துக்கு பெருமை சேர்க்கும் சிறப்பான பணிகளை மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது. குறிப்பாக ஆளூர் ஷாநவாஸ், பேராசிரியர் கு .ஞானசம்பந்தன் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளை அழைத்து விழாக்களை நடத்தியிருப்பது சிறப்பானது. அவரது சமூக, இலக்கியப் பணிகள் தொடர்ந்து சிறப்படைய வாழ்த்துவதாக குறிப்பிட்டார்.
அபுகான், இளையான்குடியைச் சேர்ந்த, தஸ்னீம் அபுதாஹிரின் ஓவியங்களை பார்வையிட்டு பாராட்டினார். இந்த ஓவியங்கள் சமூகத்தின் அவலங்கள், சமூக நல்லிணக்கம் உள்ளிட்டவற்றை பிரதிபலிப்பதாக குறிப்பிட்டார். சர்வதேச அளவில் பல விருதுகள் பெற்றாலும், மேலும் பல விருதுகளை பெற வாழ்த்தினார். மதுரை இஸ்மாயில் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!