அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர், இந் தியர் நலவாழ்வு பேரவையின் துணைத் தலைவர் பரமக்குடி ஏ.எஸ். இப்ராஹிம், குறும்பட இயக்குநர் சசி எஸ். குமார். இளையான்குடி அபுதாகிர், வழுத்தூர் ஜா. முஹையதீன் பாட்சா, மேலூர் பாலாஜி பாஸ்கர், ரோஹினி, காயல்பட்டணம் அஹமது சுலைமான், கீழை எஸ்.கே.வி. ஷேக், லதா ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நூலாய்வுரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினர்களுக்கு கல்லிடைக்குறிச்சி தில்ஷாத் பேகம் தொகுத்த துஆக்கள் குறித்த நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேலும் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். உம் அல் குவைன் கிராமிய பாடகர் ‘வணக்கம்’ என்ற பாடல் மூலம் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
மூல நூல் ஆசிரியர் இஸ்மாயில் மேலடி தமிழ் மக்களின் அன்பு தன்னை மிகவும் உற்சாகப்படுத்துவதாக அமைந் துள்ளது. இந் த ஒத்துழைப்பு தொடர வேண்டும். தொடர்ந்து தமிழ், மலையாளம், அரபி என பல்மொழி கவிஞர்களின் கவியரங்கம் உள்ளிட்ட இலக்கிய நிகழ்ச்சிகள் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். தனது கவிதை நூல் தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டதை உள்வாங்கி சிறப்பான முறையில் ஆய்வுரை வழங்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சி இலங்கை செம்மொழி எப்.எம். மூலம் நேரலையாக ஒளிபரப்பு செய்ய மௌலவி சுபையிர் அஹில் முஹம்மது ஏற்பாடு செய்தார். நிகழ்வில் வி.களத்தூர் உமர் ஃபாரூக், மலையாள எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நீண்ட நாட்களுக்குப் பின்னர் சிறப்பான இலக்கிய நிகழ்வு நடந் தது மகிழ்ச்சியளிப்பதாக பலரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!