அடுத்த தலைவராக தெரிவு செய்யப்படட மருத்துவர் ச சௌந்தரராஜன் நன்றியுரையை நிகழ்த்தினார்.
- நமது செய்தியாளர் ஞானகுணாளன்
திருகோணமலை ரோட்டரி கழகத்தின் 44 ஆவது தலைவராக நா. கிட்டினதாஸ் பதவி ஏற்க்கும் நிகழ்வு டைக் வீதியில் உள்ள றோட்டரி அலுவலகத்தில் இடம் பெற்றது. நிகழ்வில் பிரதம விருந்தினராக சி ஸ்ரீதரன் (திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர்) கலந்து கொண்டார். இவர்களுடன் ரோட்டரி மாவடட செயலாளர் (பொது) குமார் சுந்தரராஜா மற்றும் ரோட்டரி உதவி ஆளுநர் ராவண விஜயரட்ன ஆகியோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்
இவ் வைபவத்தில் திருகோணமலை ரொட்டறி கழக தலைவர் த. அகிலன் , கழகம் சார்பில் வரவேற்பு உரை நிகழ்த்தினார். அவரது காலத்தில், திருகோணமலை ரோட்டரி கிளப் சிறப்பாக செயல் பட்டதாகவும் அதட்கு உதவிய தனது குழு உறுப்பினர்களுக்கு நன்றி கூறி கௌரவித்தார். செயலாளர் க பிரபாகரன் 2021 - 2022 ஆண்டில் திருகோணமலை ரோட்டரி கழக நடவடிக்கைகள் பற்றி ஒரு சுருக்கமான விளக்கத்தை கொடுத்தார்.
இவ் நிகழ்ச்சியில் திருகோணமலை கப்பல்துறை வித்யாலயத்துக்கு ஒரு கணினித் தொகுதியும் கொப்பிகளும் கையளிக்கப் பட்ட்து.. அது போல் தம்பலகாமம் மகா வித்யாலயத்துக்கு கொப்பிகளும் கையளிக்கப் பட்டது. இதன்போது கடந்த ஆண்டின் தலைவர் த. அகிலன் புதிதாக தெரிவான தலைவர் நா.கிட்டினதாஸ்க்கு தலமைப்பதவியை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!