Load Image
dinamalar telegram
Advertisement

துபாய் நூலகத்துக்கு வழங்கப்பட்ட முதல் தமிழ் நூல்

துபாய் : துபாய் நகரில் சமீபத்தில் மிகப் பிரமாண்ட வகையில் புத்தக வடிவமைப்பில் முஹம்மது பின் ராஷித் நூலகம் திறக்கப்பட்டது. நூலகத்தை துபாய் ஆட்சியாளரும், அமீரக துணை அதிபர் மற்றும் பிரதமருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் திறந்து வைத்தார். இங்கு ஆயிரக்கணக்கான நூல்கள் அரபி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கான பிரத்யேக நூலகமும் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விளையாடும் வகையிலும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் உள்ள கண்காட்சி மையத்தில் இந்தியாவின் பிரதமராக இருந்த இந்திரா காந்தி துபாய் நகருக்கு சென்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது. மேலும் பழங்கால துபாய் மற்றும் நவீன துபாய் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தும் கண்காட்சியும் உள்ளது. ஏழு மாடிகள் கொண்ட இந்த நூலகம் கட்டிடக்கலையின் சிறப்பம்சம் கொண்டதாக உள்ளது.

இந்த நூலக அலுவலர் அப்துல் ரஹ்மானிடம் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், ஈரோடு கு ஜமால் முஹம்மது எழுதிய ‘திப்பு சுல்தான்’ என்ற நூலை அன்பளிப்பாக வழங்கினார். இந்த நூலை பெற்றுக் கொண்ட அலுவலர் இதன் மூலம் இந்த நூலகத்துக்கு கிடைத்துள்ள முதல் தமிழ் நூல் என்ற பெருமையை பெறுவதாக குறிப்பிட்டார். இந்திய விடுதலைப் போரின் முன்னோடியான திப்பு சுல்தான் என்ற நூல் துபாய் நகரின் பிரமாண்ட நூலகத்தில் இடம் பெற்றிருப்பது சிறப்புக்குரியது ஆகும்.

- நமது செய்தியாளர் காஹிலா

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement