- தினமலர் வாசகர் தமிழ்க்கோ
மலேசியாவில் சர்வதேச யோகா தின விழா
மலேசியா உலக சமாதன ஆலயம் – திருமூர்த்தி மலை தத்துவ தவ ஞான பீடாதிபதி ஜெகத்குரு மகா மகரிஷி குருமகான் பரஞ்ஜோதியார் நல்லருளாசியுடன் – மலேசியத் துணைத் தூதரக ஆதரவோடு சர்வ தேச யோகா தின விழாவை ஜீன் 26 ஆம் தேதி சிரம்பான் பாலம் மால் பேரங்காடி வளாகத்தில் சுமார் 300 பேர் கலந்து கொண்ட நிகழ்வாக மிகச் சிறப்பாக நடத்தியது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் துணைத் தூதரக ஆதரவுடன் இவ்விழா நடைபெற்று வருவது குறிப்பிடத் தகுந்ததாகும்.
இந்தியத் தூதரக இரண்டாம் செயலாளர் தேவேந்தர் சிங் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தார். நெகிரி செம்பிலான் துணை சபாநாயகர் இரவி.முனுசாமி – நெகிரி செம்பிலான் ம.இ.கா. தொடர்புத் துறை அதிகாரி எஸ்.கே.சேகர் – தொழிலதிபர் டத்தோ இளஞ்செல்வன் – புரோடெக் பேப்பர் குரூப் நிர்வாக இயக்குநர் ரவீந்திரன் சுப்பையா – ராகவேந்திர ஆசிரம நிர்வாகி சிவஸ்ரீ கோபி குருக்கள் – சிரம்பான் பிரம்ம குமாரி இயக்கத்தின் மகேஸ்வரி கேசவன் – மற்றும் மலாய் – சீன முதலிய யோகா பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.
விழாவுக்கு நல்லருளாசி வழங்கிய மகரிஷி மலேசியா நாட்டு மெய்யுணர்வாளர்களை வாழ்த்தியதுடன் பாரதப் பிரதமர் யோகாவை உலகளாவிய நிலையில் கொண்டு சென்றுள்ளதை மலேசியப் பிரமுகர்களும் பாராட்டியதற்குத் தமது மகிழ்வைத் தெரிவித்தார்.
- தினமலர் வாசகர் தமிழ்க்கோ
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!