இந்த நிகழ்ச்சியில் லேண்ட்மார்க் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் சாதிக் காக்கா, கோவிந்தகுடி சேட், அதிரை அப்துல்லா ஹஜ்ரத், அதிரை ஷேக் தாவூத் ஹஜ்ரத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
துபாய் : துபாயில் தீனிசைப் பாடல்கள் நிகழ்ச்சி துபாய் தேரா நாசர் ஸ்கொயர் லேண்ட்மார்க் ஹோட்டலில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு முஹிப்புல் உலமா கீழை ஏ. முஹம்மது மஃஹ்ரூப் தலைமை வகித்தார். ஜலால் இறைவசனங்களை ஓதினார். ஈமான் சங்க தலைவர் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் முன்னிலை வகித்தார். கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளையின் நிறுவன தலைவர் முனைவர் ஆ. முகம்மது முகைதீன் பாடகர் நாகூர் இ.எம். ஹனிபா நௌசாத் அலி குறித்த அறிமுக உரையினை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நாகூர் இ.எம். ஹனிபா நௌசாத் அலி, மறைந்த பாடகரும், அவரது தந்தையுமான நாகூர் இ.எம். ஹனிபா பாடிய தீனிசைப் பாடல்களை பாடினார். கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டு ஆண்டுகளாக இத்தகைய பாடல் நிகழ்ச்சி நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த நிகழ்ச்சி நடந்தது பலருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.
மேலும் சமூக ஆர்வலர் கீழை ஏ. முகம்மது மக்ரூப் தனது பள்ளிக்கூட தோழர் நாகூர் இ.எம். ஹனிபா நவுசாத் அலியுடன் இணைந்து 50 ஆண்டுகளுக்குப் பின்னர் இணைந்து ‘ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்’ என்ற பாடலை பாடியது மலரும் நினைவாக அமைந்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் கேரளாவைச் சேர்ந்த இஸ்மாயில் மேலடி ஆங்கிலத்தில் எழுதில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ‘பாலைவன மணற்துகள்கள்’ என்ற நூல் அறிமுகம் செய்யப்பட்டது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!