அபுதாபி : அபுதாபியில் உள்ள ஹோட்டல் ஜைத்தூனில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க ஆலோசனைக் கூட்டம் 16.05.2022 திங்கட்கிழமை நடந்தது.
இறைவசனங்களுடன் கூட்டம் துவங்கியது, ஆரம்பமாக முன்னாள் மாணவர் ஆவை அன்சாரி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அப்பொழுது அபுதாபி மற்றும் அல் அய்ன் மண்டலங்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். பின்பு சகோதரர் யஹ்யா அவர்கள் கருத்துரை வழங்கினார்.
அதன்பின்னர் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் அமீரகப் பிரிவு தலைவரும், சூப்பர்சோனிக் குழுமத்தின் மேலாண்மை இயக்குநருமான பூதமங்கலம் அல்ஹாஜ் ஜியாவுதீன் தலைமை வகித்தார்.
அவர் தனது உரையில், ஆலோசனை கூட்டத்தில் ஆர்வமுடன் பங்கேற்றவர்களை வாழ்த்தி வரவேற்று அபுதாபியின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் கல்லூரியின் முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து கூட்டம் ஒன்றை விரைவில் நடத்திட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் மேலும் கல்வி உதவி தொகையின் அவசியத்தை சிறப்பாக விளக்கினார்.
பொதுச் செயலாளர் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் வாழ்த்துரை வழங்கினார் மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை தங்கு தடையின்றி எவ்வாறு வழங்குவது என்பது பற்றிய பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, கூட்டாக சிறந்த முடிவுகள் எடுக்கப்பட்டன,
நிறைவாக மதுக்கூர் ஜாபர் சாதிக் விடுமுறை நாட்களில் பொதுநலனில் அக்கரை கொண்ட முன்னாள் மாணவர்கள் அனைவருக்கும் நெகிழ்வுடன் நன்றி கூறினார்
இக்கூட்டத்தில் ஆரம்ப கால உறுப்பினர் மதுக்கூர் ஹிதாயத்துல்லா, சங்க அலுவலக மேலாளர் மன்னர் மன்னன், முஹம்மது யஹ்யா, ஆவை அன்சாரி, மதுக்கூர் ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பங்கேற்றவர்கள் புதிய நிர்வாகிகளுக்கு தங்களது வாழ்த்துக்களை பொன்னாடை அணிவித்து தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
சதி ஆலோசனைக் கூட்டமா