அமீரக ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா
துபாய் : அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் சார்பில் ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
இந்த விழாவுக்கு தலைமை வகித்த அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் நிறுவன தலைவர் ஹபிபா அல் மராசி கூறியதாவது : இந்த ஆண்டு அறிவிப்பு செய்த இந்த ஓவியப் போட்டியில் அமீரகம் முழுவதும் உள்ள 480 பள்ளிக்கூடங்களைச் சேர்ந்த 1,44,680 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் மாற்றுத்திறனாளி பள்ளிக்கூடங்களை சேர்ந்தவர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர் என்றார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் மாணவ, மாணவியருடன் அவர்களது பெற்றோர்களும் பங்கேற்றனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!