திருகோணமலையில் புதிய தலைமுறைக்கான வாழ்க்கை எழுச்சி
திருகோணமலை ரோட்டரி கழகம், இலங்கைத் துறை முகத்துவாரம் இந்துக் கல்லூரி, கோபாலபுரம் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் திருகோணமலையில் உள்ள குச்சவெளி விவேகானந்தா கல்லூரி ஆகிய பாடசாலைகளில் உலகளாவிய மானிய திட்டம்- புதிய தலைமுறைக்கான வாழ்க்கை எழுச்சி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.திட்டத்தின் விபரம்பயனாளிகளின் எண்ணிக்கை குடும்பங்கள் (பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் மற்றும் வறுமைக் கோட்டின் கீழ்) : - 519வாழ்வாதாரத் திட்டமாகிய கோழி வளர்ப்பின் மூலமாகக் கிடைக்கின்ற வருமானம் ஊடாக அவர்களாலேயே பிள்ளைகளுக்கு காலை உணவினை வீடுகளிலே வழங்க வழி செய்யப்பட்டுள்ளது.காலை உணவு - 600 குழந்தைகள்பாடசாலை கற்றல் உபகரணங்கள் - 1000 பொதிகள்மாணவர்களுக்கான சைக்கிள்கள் - 80.போக்குவரத்து வசதியற்ற தூர இடத்திலிருந்து கால்நடையாக பாடசடிலைக்கு வரும் மாணவர்களுக்காக துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டுள்ளதோடு வருமானம் குறைந்த மாணவர்களுக்கான பாடசாலை உபகரணப் பொதிகளும் அளிக்கப்பட்டுள்ளது.இத் திடத்தின் இறுதி நிகழ்வாக 25 ஆம் திகதி செவ்வாய் கிழமை அன்று இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக் கல்லூரியில் சைக்கிள்களை கையளிக்கப் பட்ட்து.இந்த நிகழ்ச்சிக்கு திருகோணமலை ரோட்டரி கழகத்தின் தலைவர் அகிலன். திட்டத்தின் பொறுப்பாளரும் முன்னாள் தலைவருமாகிய சிவசங்கர், முன்னாள் தலைவர்களான மருத்துவர் குணாளன், திருமுகம் மற்றும் அடுத்த தலைவரான கிட்டினதாஸ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள், அபிவிருத்தி சங்கத் உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.- நமது செய்தியாளர் ஞானகுணாளன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!