பாரீசில் வைகுண்ட ஏகாதசி
பாரீசில் சவிஞ்ஞி லே தாம்ப்ள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பஜனை, பாசுரங்கள், பூஜைகள், அர்ச்சனைகளோடு பெருமாளுக்கு வழிபாடு என சிறப்பாக நடை பெற்றது. நாமாசங்கீர்த்தன வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த மார்கழியில், திருப்பாவை சொன்னவர்கள், கேட்டவர்கள், வாசித்தவர்கள், எழுதியவர்கள் என்று எல்லோருக்கும் கோதை நாச்சியாரின் திருவருளும், அவள் உகந்த கண்ணபிரானின் திருவருளும் பரிபூர்ணமாக கிடைக்கும். அது போலவே, அனைவரும் எல்லா செல்வங்களையும் பெற்று, பெருவாழ்வு வாழ்வர். பக்தர் அனைவரும் மகிழ்ச்சியாக பிரசாதம் பெற்று சென்றனர்.
- தினமலர் வாசகர் ஹரேராம் தியாகராஜன்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!