dinamalar telegram
Advertisement

தன்சானியாவில் வைகுண்ட ஏகாதசி உத்சவம்

Share

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தன்சானியா நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான டர் எஸ் ஸலாம் நகரில் உள்ள ஸ்ரீனிவாசப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உத்சவம் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. பெருமாள் சொர்க்க வாசல் வழியாக பக்தர்களுக்கு தரிசனம் கொடுத்து சிறப்பு அலங்கார மேடையில் நாள் முழுவதும் தரிசனம் அளித்தார் . இரவு விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணம் பதினோரு முறை பாராயணம் செய்யப்பட்டு அவரது பள்ளியறைக்கு எழுந்து அருளினார். பக்தர்கள் அனைவரும் தனி நபர் இடைவெளி விட்டு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

- நமது செய்தியாளர் ஸ்ரீதர்



Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் உலக தமிழர் செய்திகள் :

Advertisement