மாலத்தீவில் பொங்கல் சிறப்பு பட்டிமன்றம்
பொங்கல் திருநாளை முன்னிட்டு மாலத்தீவு தமிழ் நண்பர்கள் அமைப்பும் ராயல் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் குழுவும் இணைந்து சிறப்பு பட்டி மன்றத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.
நிம்மதியான வாழ்விற்கு உரிய இடம் உள் நாடா? வெளி நாடா என்ற தலைப்பில் இந்த பட்டி மன்றம் நடத்தப்பட்டது. மாலத்தீவில் உள்ள கலாச்சார உறவு இந்திய கவுன்சில் மையத்தில் அதன் இயக்குநர் சையது தன்வீர் முன்னிலையில் ராமன் தலைமையில் இது நடைபெற்றது.
வினோ தேவராஜ் வரவேற்க, எட்வின் மோகன் நன்றி கூறினார். மாலத்தீவு வாழ் தமிழர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!