dinamalar telegram
Advertisement

சிசெல்ஸ் ஆலயத்தில் கார்த்திகை மூன்றாவது சோம வார வழிபாடு

Share

சிசெல்ஸ் இந்து சங்க நவசக்தி விநாயகர் ஆலயத்தில் கார்த்திகை மூன்றாவது சோம வார வழிபாடு டிசம்பர் ஆறாம் தேதி மிகச்சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ சிவகாமி உடனுறை ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு 108 சங்காபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. புனித ஹோமம் நடைபெற்று – ஹோமத்தில் வைத்துப் பூஜிக்கப்பட்ட புனித கடம் ஆலயம் வலம் வந்து கலசாபிஷேகமும் கண்குளிர நடைபெற்றன.ஸ்ரீ அம்பலவாணனுக்குப் பதினெண் வகையான வாசனாதித் திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்று தங்க கவசத்தில் பெருமான் ஜொலித்தார். இதே போல சிவபெருமானுக்கும் “ ஓம் நமசிவாய வாழ்க – நாதன்தாள் வாழ்க “ என்ற பக்தப் பெருமக்களின் முழக்கத்திடை அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சோடஸ உபசார தீபாராதனை காட்டப்பட்டது. கலந்து கொண்ட பக்தப் பெருமக்களுக்கு – உபயதாரர்களுக்கு காளாஞ்சிப் பிரசாதம் வழங்கப்பட்டது. பக்தப் பெருமக்கள் அருட்பிரசாதத்துடன் அன்னப் பிரசாதமும் பெற்று மகிழ்ந்தனர். அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய மேலாண்மைக் குழுத் தலைவர் சந்திரன் நாகராஜன் பிள்ளை வழக்கம் போல சிறப்புறச் செய்திருந்தார்.- தினமலர் வாசகர் : சி.என்.பிள்ளை

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா

    ஓம் நமசிவாய வாழ்க. நாதன் தாள் வாழ்க. இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க. ஈசனடி போற்றி எந்தையடி போற்றி

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement