dinamalar telegram
Advertisement

துபாயில் சமுதாய புரலவருக்கு பாராட்டு

Share

துபாய் : துபாய் நகரிலும், தமிழகத்திலும் பல்வேறு சமுதாய நலப் பணிகளை மேற்கொண்டு வரும் புரவலர் முஹிப்புல் உலமா கீழக்கரை அல்ஹாஜ் முஹம்மது மஹ்ரூப்க்கு சிங்கப்பூர் புதிய நிலா மு ஜஹாங்கீர் பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். மேலும் தான் எழுதிய ’மனங்களை வெல்வோம் மண்ணை ஆள்வோம்’ என்ற நூலையும் அன்பளிப்பாக வழங்கினார். அப்போது பேசிய முஹம்மது மஹ்ரூப் காக்காவின் சமூகப் பணியும், இலக்கியப் பணியும் சிறப்புக்குரியது. அவரது பணி தங்கு தடையின்றி தொடர சிங்கப்பூர் தமிழர்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது சமூக ஆர்வலர்கள் வாலிநோக்கம் கலீல் பிலாலி, சென்னை ஜலால், முதுவை ஹிதாயத் திண்டுக்கல் ஜமால் முஹைதீன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement