dinamalar telegram
Advertisement

லெபனானில் நடந்த ஜூடோ போட்டியில் இந்திய அணி சிறப்பிடம்

Share

பெய்ரூட் : லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட் நகரில் ஆசியா ஓசியானிக் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் ஜூனியர் மற்றும் கேடட் ஆகிய பிரிவுகளில் இந்திய அணி பல்வேறு பரிசுகளை பெற்றது. இந்த போட்டியில் பரிசுகளை பெற்ற இந்திய குழுவினருக்கு தூதர் சுகேல் கான், தூதரக அதிகாரி சந்தீப் குரோவர் ஆகியோர் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

சர்வதேச ஜூடோ பெடரேசனின் தலைவர் ஒபைத் அல் அன்சி இந்தியாவைச் சேர்ந்த நடுவர் முனவர் அன்சர் உள்ளிட்டோரையும் தூதர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த போட்டியை சிறப்பான முறையில் நடத்திய லெபனான் நாட்டு அரசுக்கு தூதர் பாராட்டு தெரிவித்தார். இந்த போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்கள் தூதரின் வாழ்த்துக்கள் தங்களுக்கு உற்சாகத்தை அளிப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement