dinamalar telegram
Advertisement

சியாட்டெல் ஹிந்து ஆலய கார்த்திகை மாதவிழா

Share

சியாட்டெல், வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலம் போத்தல் மாநகரில் அமைந்துள்ள ஹிந்து ஆலயம் மற்றும் கலாச்சார மையத்தில் கார்த்திகை மாத தீபதிருவிழா மிகசிறப்பாக கொண்டாடப்பட்டது. திருக்கார்த்திகை மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாளுக்கு தீபஅலங்கார ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. திருக்கார்த்திகை பௌர்ணமி தினத்தன்று சிவபெருமானுக்கும், சுப்ரமணிய ஸ்வாமிக்கும் சிறப்பு தீப அலங்கார பூஜை நடைபெற்றது. மேலும் சிவபெருமானுக்கு ஜோதிர்லிங்க வழிபாடும் நடத்தபட்டது. அனைத்து சனிக்கிழமைகளிலும் சியாட்டெல் வேதபாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால் ஸ்லோக பாராயணமும், பகவத்கீதை பாராயணமும், மாணவர்களின் இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவை ஹிந்து ஆலய நிர்வாகத்தினர் மற்றும் சியாட்டெல் வேதபாடசாலை குழுவினர் மிகசிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். மேலும் விழாவில் அரசின் அனைத்து கோவிட-19விதிமுறைகளும் ஆலயநிர்வாகத்தினர் மற்றும் பக்தர்களால் கடைபிடிக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பாக நடத்தப்பட்டது.

- தினமலர் வாசகர் நாகராஜன் ஜவகர்லால்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement