dinamalar telegram
Advertisement

ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகள்- ஓர் அறிவியல் பார்வை

Share

ஆசியத்தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகள்- ஓர் அறிவியல் பார்வை என்கிற தலைப்பில் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. இக்கருத்தரங்கில் சிறப்புரையாற்றி சிவச்சித்ரா அசோகன் அறிவியல் நோக்குடன் கூடிய பல்வேறு கருத்துக்களைப்பகிர்ந்து கொண்டார்.ஆசியத்தமிழ்ச்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் சப்பான் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனருமான சே.சதீசுகுமாரின் வரவேற்புரையுடன் தொடங்கிய இக்கருத்தரங்கில் அங்கையற்கண்ணியால் உருவாக்கப்பட்ட தமிழிசை குறித்த அறிமுக காணொளியினை தைவான் தமிழ்ச்சங்கத் துணைத்தலைவர் ரமேசு பரமசிவம் துவக்கிவைத்தார். கொரியத்தமிழ்ப்பேரவையின் ஒருங்கிணைப்பாளர் அரிபாலன் விழாவினை நேர்த்தியான நெறியாள்கை செய்ய டாக்கா தமிழ்ச் சங்கத்தினைச் சேர்ந்த சதீசுகுமார் சோமுராஜுடைய நன்றி நவிலலுடன் கருத்தரங்கு நிறைவுற்றது. இக்கருத்தரங்கில் கூட்டமைப்பினைச் சார்ந்த சப்பான் தமிழ்ச்சங்கத்தின் நிறுவனர் கா.பாலமுருகன், தைவான் தமிழ்ச்சங்கத்தின் பொதுச்செயலாளர் பிரசன்னன், தைவான் தமிழ்ச்சங்க துனைப்பொதுச்செயலாளர் பொன்முகுந்தன், தாய்லாந்து தமிழ்க்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன், கொரியத்தமிழ்ச்சங்கத்தின் பத்மநாபன், ஹாங்காங் தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் சித்ரா, வியட்னாமிலுள்ள ஓச்சிமின் தமிழ்ச்சங்கம் உறவுகள் மற்றும் உலகளவிலிருந்து தாய்த்தமிழுறவுகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.இக்கருத்தரங்கின் வலையொளியைக் காணவிழைவோர் நமது கூட்டமைப்பின் வலையொளியான ஆசியத் தமிழ் ஊடகத்தில் கண்டுகளிக்க வேண்டுகிறோம்.- நமது செய்தியாளர் ரமேஷ் பரமசிவம்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement