dinamalar telegram
Advertisement

துபாயில் இந்திய வர்த்தகர்களுக்கு விருது

Share

துபாய் : துபாய் நகரில் இந்திய சில்க் ஜவுளி தொடர்பான கண்காட்சி நடந்தது. இந்த கண்காட்சியில் பங்கேற்க இந்திய வர்த்தகர்கள் பலர் பங்கேற்றனர். துபாய் நகரில் சர்வதேச அளவில் நடந்த வர்த்தகர்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்திய சில்க ஜவுளி வர்த்தகர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இந்த விருதை இந்திய சில்க ஜவுளி வர்த்தக மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் நரேஷ் குமார் சாத், துணைத் தலைவர் ஆகாஷ் மிட்டல் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்.இது குறித்து இந்திய சில்க ஜவுளி வர்த்தக மேம்பாட்டு கவுன்சிலின் தலைவர் நரேஷ் குமார் சாத் கூறியதாவது : துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இந்திய சில்க் ஜவுளி உள்ளிட்ட பல்வேறு வகையான ஜவுளிகளுக்கு நல்ல வாய்ப்பு இருந்து வருகிறது. இந்த வாய்ப்பை இந்திய வர்த்தகர்கள் பயன்படுத்திக் கொள்ள தேவையான அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருகிறது என்றார். இந்த நிகழ்ச்சியில் சில்க் ஜவுளி வர்த்தகர் பாட்டியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விருது பெற்ற வர்த்தகர்களுக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர்.- நமது செய்தியாளர் காஹிலா

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement