dinamalar telegram
Advertisement

சிசெல்ஸ் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு

Share

சிசெல்ஸ் இந்து சங்க நவசக்தி விநாயகர் ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு அக்டோபர் 24 ஆம் தேதி மாலை சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.

விநாயகப் பெருமானுக்கு மூல மந்திர ஹோமம், அப்பம் மோதக ஹோமம் செய்யப்பட்டு, பால், பன்னீர், இளநீர், விபூதி உள்ளிட்ட பதினென் வாசனாதித் திரவியங்களால் விசேஷ அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சொர்ணாபிஷேகமும் செய்யப்பட்டு கலசாபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது.

பக்தப் பெருமக்கள் “ ஓம் ஸ்ரீ மகா கணபதையே நமஹ: “ என மனமுருகி முழக்கமிட்டனர். பின்னர் சோடஸ உபசார மகா தீபாராதனை நடைபெற்றது. விநாயகர் சகஸ்ரநாம, ஆயிரம் நாமாவளிகள் பாராயணம் செய்யப்பட்டது. ஹோம உபயதாரர்களுக்கு சிறப்பு காளாஞ்சியும் அபிஷேக உபயதாரர்களுக்கு ஐந்து வகை அருட் பிரசாதங்களும் வழங்கப்பட்டன. அன்னப் பிரசாதமாகப் புளி சாதமும் சர்க்கரைப் பொங்கலும் அளிக்கப்பட்டன.

நிகழவிருக்கின்ற தீபாவளிப் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் மகளிர் மகிழுமாறு பல வண்ண நவீன டிசைன்களில் புடவைகள் ஆலயம் சார்பாக வரவழைக்கப்பட்டு சலுகை விலையில் விநியோகிக்கவும் ஆலயத் தலைவர் சந்திரன் நாகராஜன் பிள்ளை ஏற்பாடு செய்துள்ளார். லாப நோக்கமின்றிச் செய்யப்படும் இச்செயலால் ஆலயமும் இத்தீவு மக்களும் பயன்பெறுவர் என்பது உறுதி. அம்பிகைக்குச் சாற்றப்பட்டிருந்த புடவைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவரவர்கட்குப் பிடித்த புடவைகளை சலுகை விலையில் பக்தப் பெருமக்கள் வாங்கிச் சென்று மகிழந்து பாராட்டினர். இன்றைய வழிபாடு தீபாவளிக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்தது எனலாம்.

- தினமலர் வாசகர் சி.என்.பிள்ளை

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement