dinamalar telegram
Advertisement

துபாயில் மீலாதுப் பெருவிழா

Share

துபாய் : துபாய் அல் மம்சார் பகுதியில் உள்ள கலாச்சாரம் மற்றும் அறிவியல் சங்கத்தில் மீலாதுப் பெருவிழா சிறப்புடன் நடந்தது. இந்த விழாவுக்கு துபாய் கலாச்சாரம் மற்றும் அறிவியல் சங்க தலைவர் பிலால் அல் பதூர் தலைமை வகித்தார். துபாய் ஆட்சியாளரின் மனிதாபிமானம் மற்றும் கலாச்சார விவகாரத்துறையின் ஆலோசகர் இப்ராஹிம் பு மெல்கா மற்றும் கவிஞர் ஒசாமா அல் சபி ஆகியோர் பங்கேற்று மீலாதுப் பெருவிழாவின் சிறப்புகள் குறித்து விவரித்தனர். மேலும் நபி புகழ் பாடல்கள் உள்ளிட்டவையும் பாடப்பட்டது. சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த விழாவில் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந் து கொண்டனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement