dinamalar telegram
Advertisement

சிங்கப்பூரில் புரட்டாசி ஐந்தாவது சனிக்கிழமை மஹோற்சவ கோலாகலம்

Share

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் அக்டோபர் பதினாறாம் தேதி புரட்டாசி ஐந்தாம் சனிக்கிழமை மஹோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. புரட்டாசி மாதம் முழுவதுமே எம்பெருமானுக்குப் புனிதமான மாதமே. சனிக்கிழமை மிக விசேஷமானது. இன்றைய சூழல் கருதி முதல்நாளே ஸ்ரீ சீதா லட்சுமண ஹனுமந் சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு சிறப்புத் திருமஞ்சனம் நடைபெற்றது. வைகானஸ ஆகம முறைப்படி சனிக்கிழமை திருத்தளிகை சமர்ப்பிக்கப்பட்டது. ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தி கருட சேவையில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

மூன்றாவது சனிக்கிழமை திருக்கல்யாண உற்சவம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. வைகானஸ ஆகம முறைப்படி ஹோமம் நடைபெற்று புனித கலசம் ஆலயம் வலம் வரப்பெற்று கலசாபிஷேகம் நடைபெற்றது. ஐந்தாவது சனிக்கிழமை அலங்காரம் அனைவரையும் ஈர்த்தது. பக்தப் பெருமக்களுக்கு கல்யாண விருந்து போல அறுசுவை உணவு, வடை, பாயசம், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை என மதியம் சுமார் 1500 பேருக்குப் பார்சல் செய்து வழங்கப்பட்டது. இரவு சுமார் 1000 பேருக்கு இட்லி, வடை உட்பட அன்னப் பிரசாதம் வழங்கப்பட்டது. இன்றைய சூழல் கருதி பக்தர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதிக்கப்படவில்லை.

தனி மனித இடைவெளி விட்டு முகக்கவசமணிந்து உள் நுழைவு ஒருபக்கமும் வெளியே வருவது மறுபுறமுமாக பக்தர்கள் கட்டுப்பாட்டுடன் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை தரிசித்தனர். ஆலய நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். வைகானஸ யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார்யார் புரட்டாசி மகத்துவம் பற்றி எடுத்துரைத்தார். பக்தி மயமாயத் திகழ்ந்த புரட்டாசி நிறைவு பெற்றது.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement