dinamalar telegram
Advertisement

சிசெல்ஸ் ஆலய நவராத்திரி ஆறாம் நாள் விழா

Share

சிசெல்ஸ் இந்து சங்க நவசக்தி விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி ஆறாம் நாள் உற்சவம் 12.10.2021 செவ்வாய்க் கிழமை மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீகாந்த் சிவாச்சாரியாரின் கண்கவர் அலங்காரத்தில் ஸ்ரீ அன்னை அஷ்டபுஜ துர்க்கை வடிவத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.ஒவ்வொரு நாளும் மங்கல மகளிர் முன்னாளை விட அதிக அளவில் பங்கேற்று பக்திப் பரவசத்தோடு பாமாலை பாடி பிரார்த்திப்பது ஆலய நிர்வாகத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. வருகை புரிந்தோர் அனைவருக்கும் சௌபாக்கிய திரவியங்கள், அருட் பிரசாதங்கள், அட்சதை ஆசிர்வாதமென ஆலய சிவாச்சார்யர்களின் சேவை பக்தர்களிக் கண்களில் நீரைப் பணிக்க வைக்கின்றன. ஸ்ரீ சோடஸ உபசார மகா தீபாராதனை மனமுருக வைக்கிறது. நாதஸ்வர ஊஞ்சல் பாட்டு கூடுதல் தெய்விக உணர்வை அளிக்கிறது.மங்கல மகளிர் முளைப்பாரி பாலிகை இடும் பணியிலும் கவனம் செலுத்தத் தொடங்கி விட்டனர். வழக்கம் போல அன்னப் பிரசாதமும் வழங்கப்பட்டது. ஆலய நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்புறச் செய்து வருகின்றனர்.-தினமலர் வாசகர் : சி.என்.பிள்ளை

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement