dinamalar telegram
Advertisement

சிசெல்ஸ் ஆலய நவராத்திரி ஐந்தாம் நாள் விழா

Share

சிசெல்ஸ் இந்து சங்க நவசக்தி விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி உற்சவ ஐந்தாம் நாள் விழா அக்டோபர் பதினொன்றாம் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. இன்று வளர் பிறை சஷ்டி. ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ முருகப் பெருமானுக்குப் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பதினெட்டு வகை வாசனாதித் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தங்கக் கவசமணிவிக்கப்பட்டு அழகே வடிவாக சண்முகப் பெருமான் காட்சியளித்தார்.ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கும் விசேஷ அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. கொலு மண்டபத்தில் அம்பிகை இன்று கருணையே வடிவான காஞ்சி காமாட்சியாக உருவெடுத்துக் காட்சி அருளினார். மங்கல மகளிர் இன்றும் ஆர்வத்தோடு பங்கேற்று கருமாரி அம்மன் ஸ்தோத்திரப் பாடல்களைப் பக்திப் பரவசத்தோடு பாடி வழிபட்டனர். கற்பூர நாயகியே கனகவல்லி, கண்ணீரைத் துடைத்திட ஓடி வா அம்மா, காத்திருக்க வைத்திருப்பது சரியா அம்மா என உருக்கத்தோடு பாடியது அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.மகா லட்சுமி அஷ்டகம், லிங்காஷ்டக ஸ்லோகங்களையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. ஐயப்பன் நாதஸ்வர இசையில் ஊஞ்சல் பாடல் ஒலிக்க சோடஸ உபசார மகா தீபாராதனை நடைபெற்றது கண்கொள்ளாக் காட்சியாகும். கலந்து கொண்ட மகளிர் அனைவருக்கும் வண்ணத் தட்டில் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. சௌபாக்கிய திரவிய அட்சதை ஆசிர்வாதமும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க இன்றும் அன்னப் பிரசாதத்தில் சுண்டல், வடை, பாயசத்துடன் தக்காளி சாதம் இடம் பெற்றது. அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகம் சிறப்பாகச் செய்திருந்தனர்.- தினமலர் வாசகர் சி.என்.பிள்ளை

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement