dinamalar telegram
Advertisement

அக்., 18 வரை அபுதாபி மௌலிது கமிட்டி நிகழ்ச்சி

Share

அபுதாபி : அபுதாபி மௌலிது கமிட்டியின் சார்பில் உத்தம நபி உதித்த சங்கையான மாதமான ரபியுல் அவ்வல் மாதத்தையொட்டி தினமும் மார்க்க அறிஞர்களைக் கொண்டு சிறப்பு நிகழ்ச்சி காணொலி வழியாக நடத்தப்படுகிறது. தினமும் அமீரக நேரப்படி இரவு 7 மணிக்கு மௌலிது மஜ்லிசும், அதனையடுத்து பயான் மஜ்லிசும் நடக்கிறது.

ஜூம் வழியாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மௌலவி காயல் ஹுசைன் மக்கி ஆலிம் உள்ளிட்ட குழுவினர் இந்த நிகழ்ச்சி சிறப்புடன் நடக்க தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

- நமது செய்தியாளர் காஹிலா



Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement