dinamalar telegram
Advertisement

சிசெல்சு ஆலயத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்சவம்

Share

சிசெல்சு நவசக்தி விநாயகர் ஆலயத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மூலவருக்கு விசேஷ அபிஷேகம் – கலசாபிஷேகம் நடைபெற்று வடை மாலை சாற்றி சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் விசேஷ ஹோமங்கள் நடைபெறும்முதல் சனிக்கிழமையான செப்டம்பர் பதினெட்டாம் தேதி ஹயக்ரீவர் ஹோமம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இரண்டாவது வார சனிக்கிழமையன்று ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஹோமம் – மூன்றாவது வாரத்தில் தன்வந்திரி ஹோமம் – நான்காவது வாரத்தில் சுதர்ஸன ஹோமமும் கடைசி ஐந்தாவது வார சனிக்கிழமையன்று அஷ்டாக்ஷ்ரி ஹோமமும் நடைபெறவுள்ளன.முதல் வாரத்தில் பக்தர்கள் செலுத்திய வடை மாலை அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தமை கண்கவர் காட்சியாக அமைந்தது. இருபதாம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு ஸ்ரீ அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூஜைகள் நிறைவு பெற்று பக்தர்களுக்கு அருட் பிரசாதம் வழங்கப்பட்டது.ஆலய மேலாண்மைக் குழுத் தலைவர் சந்திரன் நாகராஜன் பிள்ளை அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்திருந்தார்.- தினமலர் வாசகர் சி.என்.பிள்ளை

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement