dinamalar telegram
Advertisement

புரட்டாசி முதல் சனிக்கிழமை உற்சவம்

Share

எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணனுக்கு உகந்த மாதம் புரட்டாசி. மார்கழி மாதமும் பெருமாளுக்கு உகந்த மாதமே. வைகானஸ ஆகம பகவத் சாஸ்திரப்படி எம்பெருமானுக்கு புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம்.

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ சீதா ஹனுமந் சமேத ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கு புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. இன்றைய கோவிட் சூழல் கருதி இரண்டு கட்டமாக வழிபாடு நடத்தப்பட்டது. முதல் நாள் வெள்ளிக்கிழமை மாலை மூல மந்திர ஹோமம் – திருமஞ்சனம் நடைபெற்றன. சனிக்கிழமை வைகறையில் விஸ்வரூப தரிசனம் – சுப்ரபாத சேவை பக்தர்கள் அமர்ந்து சேர்ந்து பாராயணம் செய்யப்பட்டது. பின்னர் எம்பெருமான் திருவிளக்கில் ஆவாஹணம் செய்யப்பட்டு தளிகை சாற்றி சமர்ப்பணம் செய்தது கண்கொள்ளாக் காட்சியாகும்.

இந்த இறைப் பிரசாதம் – வடை – பாயசம் – அப்பளம் உள்ளிட்ட அறுசுவைப் பிரசாதம் சுமார் ஆயிரம் பேருக்குப் பொட்டலமாக வழங்கப்பட்டது. மாலையில் எம்பெருமான் சர்வ அலங்கார நாயகராக கருட சேவையில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். சகஸ்ரநாம பாராயணமும் நடைபெற்றது. மாலையிலும் இட்டிலி – இனிப்பு பிரசாதங்கள் இதே போல பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

அரசு ஆலோசனைப்படி தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் மட்டுமே ஆலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பக்தப் பெருமக்களும் கட்டுப்பாட்டுடன் கலந்து கொண்டு தரிசித்தனர். தலைமை அர்ச்சகர் வைகானஸ யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார்யார் ஸ்ரீமந் நாராயண மூர்த்தியின் மகிமை – புரட்டாசி மகத்துவம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். ஆலய நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement