dinamalar telegram
Advertisement

பாரீசில் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரா் ஆலய பூமி பூஜை விழா

Share

பிரான்ஸ் சவிஞ்ஞி லே தாம்ப்ள் கோவில் நிலத்தில் புதிதாக கட்டவிருக்கும் சிவன் ஆலய கட்டுமான பூமிபூஜை மிக சிறப்பா ன முறையில் ஹோமம், ஆகம பூஜைகளுடன் இனிதே நடைபெற்றது.மக்கள் அனைவரும் வந்து பூஜையில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். கட்டுமான பணி தொடங்குவதற்கு பலர் நிதி உதவினர்.மூலஸ்தான கடக்கால் பூசைக்கு வந்திருந்த குருக்கள் உட் பட பெண்களும் தங்கள் கைகளில் இருந்த தங்க மோதிரங்களை கழற்றி சிவனுக்கு அர்பணித்தது வந்திருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.நிர்வாக தலைவர் சுகுமாறன் மற்றும் அவருடைய துணைவியார் தலைமையில் அகோர மூர்த்தி குருக்களும் அவரது மகன் தியாகராஜன் குருக்களும் பூஜைகளை வெகு சிறப்பாக நடத்திக்கொடுத்தனர். அனைவருக்கும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.- தினமலர் வாசகர் ஹரேராம் தியாகராஜன்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement