dinamalar telegram
Advertisement

சிங்கப்பூர் எழுத்தாளருக்கு விருது

Share

திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் சர்வ தேச அளவில் தமிழில் வெளியான சிறந்த நூல்களைத் தேர்வு செய்து விருது வழங்கி வருகிறது. 2021 ஆம் ஆண்டின் விருதுக்கான நூல்களில் சிங்கப்பூர் எழுத்தாளர் மில்லத் அகமது எழுதிய “ சிங்கப்பூரில் சரவணன் “ நூல் அயலகப் பிரிவில் விருதுக்கான சிறந்த நூலாகத் தேர்வு பெற்றுள்ளது.

கடந்த ஆண்டு இந்நூல் அமெரிக்க உலகத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் அறிவொளி விருது பெற்றது. மேலும் 2016 ஆம் ஆண்டு சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய முத்தமிழ் விழாக் குறுநாவல் போட்டியிலும் இந்நூல் பரிசு பெற்றது குறிப்பிடத் தகுந்தது.

இந்நூல் 2013 ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்டு எழுதப்பட்டது. வெளிநாட்டில் இறந்தவரின் உடலைத் தாய் மண்ணிற்கு எடுத்துச் செல்லுவதில் ஏற்படும் இடர்ப்பாடுகளை உணர்வுபூர்வமாக இந்நூல் விளக்குகிறது. வெளிநாடு மோகத்தில் சிக்கி தமிழர்கள் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் – முகவர்களால் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதையும் – இந்து முஸ்லிம் கிறித்துவம் என மத நல்லிணக்கமும் அதனால் உருவாகும் நட்பும் – குடும்பத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு தியாகம் செய்யப்படுகிறது என்பதையும் இந்நூல் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது.

- நமது செய்தியாளர் : வெ.புருஷோத்தமன்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement