dinamalar telegram
Advertisement

விநாயகர் சதுர்த்தி விசேஷ வழிபாடு

Share

லேகோஸ், நைஜீரியா: விநாயகர் சதுர்த்தி ஆகஸ்டு 26ம் தேதி லட்சார்சனை தொடங்கி செப்டம்பர் 10ம் தேதி ஹோமம் மற்றும் சிறப்பு அலங்கார ஆரத்தியுடன் இனிதே நிறைவடைந்தது. விநாயகர் சதுர்த்தி அன்று காலை கணபதி ஹோமம் வளர்த்து விக்னேஷ்வரருக்கு உலர் பழங்கள் கொண்டு அலங்காரம் செய்து மஹா தீபாராதனையோடு லேகோஸ் விநாயகர் காட்சி அளித்தார்.ஆலய நிர்வாகம் அர்ச்சகர் சிவகுமார் சிவாச்சாரியாரின் ஒப்பற்ற சேவைக்கு பாராட்டுக்கள் கலந்த நன்றிகளை தெரிவித்து கொண்டது. எந்த வருடமும் இல்லாத அளவிற்கு உச்ச கட்ட ஆதரவாளர்கள் தங்கள் ஆதரவை நன்கொடை, பூஜை, அர்ச்சனை, பூமாலை மற்றும் பிரசாதங்கள் மூலம் அனேக முறையில் பங்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.- நமது செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement