dinamalar telegram
Advertisement

சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கத்தின் மருத்துவ உதவி

Share

உலகெங்கும் கொரோனா தொற்றுப் பரவல் இன்னும் குறைந்தபாடில்லை. தனியார் நிறுவனங்களும் அரசும் தன்னால் இயன்ற பணிகளையும் உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறது. உலகமெங்கும் இது பொருந்தும்.இந்நிலையில் பல வகையில் உதவிகள் செய்து கொண்டிருக்கும் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் மீண்டும் ஓர் பேருதவி ஆற்றியுள்ளது.சென்னை தாம்பரத்தில் உள்ள அரசு மார்பு சிகிச்சை மருத்துவமனைக்கு 12 பல்ஸ் ஆக்ஸிமீட்டர் மானிட்டர்களை வழங்கியுள்ளது பாராட்டத்தக்கது. இதற்காக சான் ஆண்டோனியோ வாழ் தமிழ் மக்கள் 6000 டாலர்களை நன்கொடையாக அளித்துள்ளனர்!உயிர் காக்கும் கருவி வழங்கும் இம்முயற்சியில் ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் ஈஸ்ட்டும் இணைந்து பயணித்தது குறிப்பிடத்தக்கது.தமிழகத்தில் தொடர்ந்து நற்பணிகளை மேற்கொண்டு வரும் சான் ஆண்டோனியோ தமிழ் சங்கத்திற்கும் தமிழ் மக்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்!- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement