dinamalar telegram
Advertisement

அபுதாபி அய்மான் சங்கம் ஏற்பாட்டில் சகோதர சமுதாயத்தை சேர்ந்த சின்னவன் முத்து உடல் நல்லடக்கம்

Share

அபுதாபி : அபுதாபியில் கடந்த 26.05.2021 புதன் கிழமை அன்று மரணமடைந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சின்னவன் முத்து அவர்களுடைய உடலை முன்னின்று நல்லடக்கம் செய்யும் பணிகளை மேற்கொள்ளுமாறு அவருடைய குடும்பத்தார்கள் அய்மான் சங்கத்தை கேட்டுக் கொண்டனர்.மேலும் இராமநாதபுரம் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.நவாஸ் கனி , மற்றும் தர்மபுரி தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் எஸ்.செந்தில் குமார் ஆகியோர் தனிப்பட்ட முறையில் அய்மான் சங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டு நல்லடக்கப் பணிகளை மேற்கொள்ள கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அய்மான் நிர்வாகிகள் இந்திய தூதரகம் மற்றும் அமீரக அரசு சார்த்த அலுவல் பணிகளை மேற்கொண்டனர்.
சின்னவன் முத்து அவர்களின் இறப்பு சம்பந்தமாக வேலைகள் அய்மான் சங்கத்திற்கு பெரும் சவாலாக இருந்தது என்றால் மிகையாகாது.இறந்தவர் அல் சீலா (அபுதாபியில் இருந்து 300 கிலோமீட்டர்) பகுதியில் வசிக்கக் கூடியவர்.இறந்தவரின் உடலோ பதா ஜாயித் என்ற வேறொரு இடத்தில் இருந்தது. இறந்தவரின் சம்பந்தப்பட்ட வழக்கு பதிவான இடம் ருவைஸ் ஆகும்.அய்மான் சங்க தலைவர் கீழக்கரை ஹெச். எம். முஹம்மது ஜமாலுதீன் அவர்களின் அறிவுறுத்தலின்படி அய்மான் நிர்வாகிகள் அபுதாபியில் தங்களது அலுவலகப் பணி நேரங்களுக்கு இடையில்,துரிதமாக செயல்பட்டு, அனைத்து பணிகளையும் ஒருங்கிணைத்து முடித்துள்ளார்கள்.சின்னவன் முத்து அவர்களுடைய உடல் நல்லடக்கம் 04-06-2021 மாலை 6.00 மணிக்கு அபுதாபியில் உள்ள பனியாஸ் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது'அன்னாரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினர் - உற்றார் - உறவினர் - நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இறைவன் பொறுமையை தருவானாக.இறைவன் பொருத்தத்தை நாடி இதற்காக நம்முடன் உழைத்த ருவைஸ் நகரில் வசிக்கும் கடலூர் ஷாநவாஸ், ஜாயித் சிட்டியில் வசிக்கும் கேரள சமூக ஆர்வலர் ஹம்ஜா, கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலர் சகோதரர் அபூபக்கர் மற்றும் இப்பணிகளில் முழுமையாக ஈடுபட்டு உழைத்த அய்மான் சங்கத்தின் நிர்வாகிகள் ஆகியோருக்கு அந்த குடும்பத்தினர் நன்றியை தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா


Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement