dinamalar telegram
Advertisement

பிளோரிடா லேக் மேரி-பிளோரிடா தமிழ் அகாடமியின் பட்டமளிப்பு விழா

Share

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்குஎழுமையும் ஏமாப் புடைத்து-குறள்பொருள்: ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்இத்தகைய சிறப்பு வாய்ந்த கல்வியை அடுத்த தலைமுறைக்கு அழகாய் வழங்கி,அதற்கான அங்கீகாரத்தையும் விழாவாக நடத்தி பட்டங்களையும்,கோப்பைகளை வழங்கி பாராட்டியது பிளோரிடா லேக் மேரியில் உள்ள பிளோரிடா தமிழ் அகாடமி!மே 29 அன்று மெய்நிகரில் இந்நிகழ்வு நடந்தது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கி, கோவிட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஒரு சிறு மௌன அஞ்சலி செய்து பின் ஆரம்பித்தனர். இவ்விழாவில் என்ன சிறப்பென்றால் மாணாக்கர்களுக்கு மட்டுமல்லாது ஆசிரியர்களையும் நன்கு சிறப்பித்தது பாராட்டத்தக்கது!பயின்று பட்டம் பெரும் மாணாக்கர்களுக்கு பட்டங்களும் விருதுகளும் வழங்கியது போலவே, விடுப்பு எடுக்காமல் 100 % முழு வருகை பதிவு செய்த மாணாக்கர்களுக்கும் முழு வருகை பதிவு செய்த ஆசிரியரான திருமதி.திரிபுரசுந்தரி இளமதிக்கும் பாராட்டு வழங்கியது மிக நன்றுஅதே போன்று குழந்தைகளின் தலைமைப் பண்பையும் பாராட்டி ஸ்காலர்ஷிப் விருதுகள் வழங்கப்பட்டது. அதற்கான சிறப்பு பயிற்சியாளர்கள் மூன்று பேருக்கும் பெயர் பதித்த சான்று விருதுகள் வழங்கப்பட்டன.மேலும் பெற்றோர் தன்னார்வலர்களையும் பாராட்டி விருதுகள் வழங்கினர். முடிவாக கலைவாணி அவர்களின் நன்றியரையுடன் இனிதே இந்நிகழ்வு நடந்தேறியது.இந்நிகழ்வு அனைத்தையும் திரு.குழலன் மற்றும் திரு.மதி இருவரும் சிறப்பாய் தொகுத்து வழங்கினர். இப்பள்ளிக்கு தினமலர் சார்பாக வாழ்த்துகள்!- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்


Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement