dinamalar telegram
Advertisement

சிங்கப்பூரில் ஸ்ரீ சீதா – ராமர் திருக்கல்யாண வைபோகம்

Share

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ ராம நவமி மஹோற்சவத்தின் முத்திரைத் திருவிழாவான ஸ்ரீ சீதா – ராமர் திருக்கல்யாணம் மே திங்கள் முதல் தேதி வெகு விமரிசையாக நடைபெற்றது. மங்கல இசை முழங்க அம்மி மிதித்து – அருந்ததி பார்த்து – மாலை மாற்றி – மலர்ச் செண்டு உருட்டி திருமாங்கல்யதாரணம் கோலாகலமாக நடைபெற்றது. தலைமை அர்ச்சகர் வைகானஸ யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார்யார் தெய்விகத் திருமண வைபவத்தை நடத்தி வைத்தார். சர்வ அலங்கார நாயகர்களாக ஸ்ரீ சீதா – ராமர் தெய்விகத் தம்பதிகள் எழுந்தருளி மணக்கோலத்தில் காட்சியளித்தமை மெய்சிலிர்க்க வைத்த காட்சியாகும். பக்தப் பெருமக்கள் முகக் கவசமணிந்து தனி மனித இடைவெளி விட்டு அமர்ந்து தெய்விகத் திருமணத்தைக் கண்கொள்ளாக் காட்சியாகக் கண்டு களித்தனர். இன்றைய சூழலால் மணவிழா விருந்து நடைபெறவில்லை. ஆலய நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
– நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement