dinamalar telegram
Advertisement

துபாயில் தமிழ் சிறுகதைத் தொகுப்பு நூல் அறிமுகம்

Share

துபாய் : துபாய் சத்வா பகுதியில் உள்ள ஜிஞ்சர் டீ உணவகத்தில் தமிழ் சிறுகதைத் தொகுப்பு நூல் அறிமுகம் செய்யப்பட்டது. சென்னையைச் சேர்ந்த சமூக சேவகி ஜரினா ஜமால் எழுதிய விடியலைத் தேடிய வெள்ளைப் புறா என்ற சிறுகதைத் தொகுப்பு நூல் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
திருச்சி பைஜூர் ரஹ்மான், சமூக சேவகர் கவுசர் பெய்க், ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், முஹ்சின் உள்ளிட்ட குழுவினர் இந்த நூல் அறிமுத்தில் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்து சுவைமிக்க தமிழக நோன்பு கஞ்சியுடன் கூடிய நோன்பு திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது.
-- நமது செய்தியாளர் காஹிலா

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement