dinamalar telegram
Advertisement

ராசல் கைமாவில் தொழிலாளர்களுக்கு நோன்பு திறக்கும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது

Share

ராசல் கைமா : ராசல் கைமா நகரில் இருந்து ஓமன் நாட்டின் முசந்தம் பகுதிக்கு செல்லும் வழியில் எமிரேட்ஸ் ஸ்டீவ்டோரிங் என்ற நிறுவனத்தின் தொழிலாளர் முகாம் இருந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நோன்பு திறக்கும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கு தினமும் பிரியாணி, ஜூஸ், தண்ணீர், பேரீச்சம் பழம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இங்கு இந்தியா, பாகிஸ்தான், ஆப்பிரிக்கா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் இருந்தாலும் கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை சரியாக பின்பற்றப்பட்டு வருகிறது.சமூக இடைவெளி முறையாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த பணிகளை நலத்துறை அலுவலர் அஹமது சுலைமான் தலைமையிலான குழுவினர் மேற்பார்வை செய்து வருகின்றனர்.
-- நமது செய்தியாளர் காஹிலா

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement