dinamalar telegram
Advertisement

நவ பாரதம் பஹ்ரைன்: இலவச சிறப்பு மருத்துவ முகாம்

Share

பஹ்ரைன் மணாமா: நவ பாரதம் மற்றும் கிம்ஸ் மருத்துவமனை முஹர்ரக் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் இலவச சிறப்பு மருத்துவ முகாம் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தினமும் சுமார் நூறுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனை மற்றும் பல்வேறு மருத்துவ சேவைகளை இலவசமாக பெற்றனர்.
நவ பாரதம் தலைவர் பிரதீப் லட்சுமிபதி, துணை தலைவர் டாக்டர் வெங்கட், துணை பொது செயலாளர் கார்த்திகேயன், கிம்ஸ் மருத்துவமனையின் நிர்வாக மேலாளர் அனஸ் பஷீர், துணை பொது மேலாளர் ராஜசேகர் ஆகியோர் வெள்ளிக்கிழமை நடைபெற்ற துவக்கவிழாவில் கலந்துகொண்டனர்.
இலவச சிறப்பு மருத்துவ முகாமானது இந்த வாரம் முழுவதும் நடைபெறும், பஹ்ரைன் வாழ் தமிழர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். கொரோனா நோய் தோற்று கட்டுப்பாடுகள் அரசின் அறிவுறுத்தலின்படி கடைபிடிக்கப்படுகிறது.

- நமது செய்தியாளர் பெ. கார்த்திகேயன்

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement