ராசல் கைமா : ராசல் கைமா அசோக் லேலண்டு நிறுவனத்தில் இந்திய துணை தூதருடன் காலை உணவு என்ற சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்திய துணை தூதர் டாக்டர் அமன் புரியுடன் தொழிலாளர்கள் காலை உணவு சாப்பிடும் நிகழ்ச்சி நடந்தது.
அப்போது ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் மதுரை விமான நிலைய சுற்றுலாத்துறை உதவி அலுவலர் கவிஞர் இரா. இரவி எழுதி இந்தி மொழியில் மொழிபெயர் ஹைக்கூ கவிதை நூலை துணை தூதரிடம் அன்பளிப்பாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அசோக் லேலண்டு நிறுவன அதிகாரிகள், வர்த்தக பிரமுகர்கள், தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
-- நமது செய்தியாளர் காஹிலா
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!