தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
அமெரிக்காவில் ஐயப்ப படிபூஜை
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள Pearland பகுதி ஸ்ரீ மீனாட்சி ஆலயத்தில் நவம்பர் 28 ம் தேதியன்று ஐயப்ப படி பூஜை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு படி பூஜையும், அதைத் தொடர்ந்து சுவாமி ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. செண்டை மேளம் முழங்க சகஸ்ரநாம பாராயணம் நடத்தப்பட்டது. ஹரிவராசனம் பாடி, படி பூஜை நிறைவடைந்தது. கோவிட் 19 கட்டுப்பாடுகள் காரணமாக மிக சில பக்தர்கள் மட்டுமே பூஜையில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் பக்தர்கள் வசதிக்காக படி பூஜை நிகழ்வுகள் அனைத்தும், ஆலயத்தின் முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்பட்டது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு, பரவசம் அடைந்தனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!