தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
டெக்சாசில் கார்த்திகை சோமவார பூஜை
டெக்சாஸ் மாகாணத்தின் Pearland பகுதி ஸ்ரீ மீனாட்சி திருக்கோயிலில் டிசம்பர் 01 ம் தேதி கார்த்திகை சோம வார பூஜை நடைபெற்றது. கார்த்திகை சோம வாரத்தை முன்னிட்டு சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது. சுந்தரேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுந்தரேஸ்வரருக்கு சிவபுராணம் ஓதப்பட்டு, வழிபாடு நடத்தப்பட்டது. கோவிட் 19 கட்டுப்பாடுகள் காரணமாக திருக்கார்த்திகை மற்றும் கார்த்திகை சோமவார சிறப்பு பூஜைகளில் பங்கேற்ற மிகக் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!