தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
ஷார்ஜாவில் காணொலி வழியாக நடந்த அமீரக தேசிய தினம்
ஷார்ஜா : ஷார்ஜாவில் ஏகதா அமைப்பின் சார்பில் அமீரக தேசிய தின விழா கொண்டாட்டம் காணொலி வழியாக 02.12.2020 புதன்கிழமை நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அமீரக தேசிய கீதம் பாடப்பட்டது. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். அமீரக தேசிய தினத்தையொட்டி எனது அமீரகம் என்ற தலைப்பில் ஓவியப் போட்டியும் நடந்தது. இந்த ஓவியப் போட்டியில் சிறந்த ஓவியத்தை வரைந்தவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
-- நமது செய்தியாளர் காஹிலா
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!