தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
சிட்னி முருகன் கோயிலில் திருக்கார்த்திகை விரத வழிபாடு
சிட்னி முருகன் கோயிலில் நவம்பர் 29 ம் தேதியன்று திருக்கார்த்திகை விரத வழிபாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவை முன்னிட்டு வள்ளி–தெய்வானை சமேத முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டன. மாலையில், அகல் விளக்குகளுடன் உபயதாரர்கள் முன் செல்ல, மயில் வாகனத்தில் முருகப் பெருமான் ஆலய வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிட் 19 கட்டுப்பாடகள் காரணமாக மிகக் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே ஆலயத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் வீட்டில் இருந்தபடியே திருக்கார்த்திகை விரத வழிபாட்டு நிகழ்வுகளை காண்பதற்காக, ஆலய நிகழ்வுகள் அனைத்தும் சிட்னி முருகன் கோயிலில் முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்பட்டது.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!