dinamalar telegram
Advertisement

பிரான்ஸில் மங்கள சந்திப்பு

Share

பிரான்ஸில் கெட்டி மேளம் சங்கத்தின் சார்பில் மங்கள சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பிரான்ஸில் 15/11/2020 அன்று மாலை 4.30 மணிக்கு கெட்டி மேளம் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஒரு இணைய காணொலி(ZOOM) வழியாக மங்கள சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


சங்கத்தின் தலைவர் மதியழகன் வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சங்கத்தின் தொழில் நுட்ப உதவியாளர்கள் முத்துகுமார், வரதராஜ் உதவியுடன் மூன்று மணி நேரம் நடைபெற்றது. செயளாலர் தெய்வ பிரகாசம், குணசேகரன், திருமதி அனிதா வரன்களை தமிழிலும் பிரஞ்சு மொழியிலும் அறிமுகப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.


பங்கேற்ற அனைத்து உறுப்பினர்களும் தங்கள் திருப்தியையும் மனநிறைவையும் தெரிவித்தனர். சங்கத்தின் துணைத்தலைவர் பிரபுராம் நன்றியுரை வழங்க, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

- தினமலர் வாசகி ஜெய கௌரி

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Muthukumaran - Evry,பிரான்ஸ்

    ஜெயா கௌரி பலமாதங்களுக்கு பின் பிரான்சில் வாழும் தமிழர்களும் தாய் மொழிக்காகவும் தமிழர் களுக்காகவும் ஆற்றும் செயல்களை அனுப்பியதற்காகவும் பிரான்ஸ் நடத்தின் இத்தகைய தொண்டினை இருட்டடிப்பு செய்யாமல் வெளி இட்ட தினமலர் படிப்பாளருக்கும் மிக்க நன்றி. முத்துக்குமரன்.

Home கருத்தைப் பதிவு செய்ய

Advertisement