dinamalar telegram
Advertisement

சிங்கப்பூர் முருகன் கோயிலில் வேல் வாங்குதல் வைபவம்

Share

சிங்கப்பூர் புனித மரத்தடி ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலயத்தில் கந்தசஷ்டி விழா நவம்பர் 15 ம் தேதி துவங்கி, வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஏராளமான பக்தர்கள் காப்புக் கட்டி சஷ்டி விரதம் அனுஷ்டித்த வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்வாக நவம்பர் 19 ம் தேதி சக்தி வேல் வாங்குதல் வைபவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு முருகப் பெருமானுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது. பிறகு அலங்கரிக்கப்பட்ட சிறிய தேரில் உற்சவ மூர்த்தி எழுந்தருளி, விசாலாட்சி அம்மன் சன்னதியில் அழைத்து வரப்பட்டார். தொடர்ந்து விசாலாட்சி அம்மன் சன்னதியில் வேலுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் நடத்தப்பட்டது. அம்பாளின் ஆசி பெற்ற பிறகு, முருகப் பெருமானிடம் வேல் வழங்கப்பட்டது. சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. மிகக் குறைந்த அளவிலான பக்தர்கள் மட்டுமே இந்த வைபவத்தின் போது அனுமதிக்கப்பட்டனர். வேல் வாங்குதல் நிகழ்வானது புனித மரத்தடி ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலய முகநூல் பக்கத்தில் நேரலை செய்யப்பட்டது.

Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

Home கருத்தைப் பதிவு செய்ய

    மேலும் உலக தமிழர் செய்திகள் :

Advertisement